நட்பு கவிதை – 100+ Friendship Quotes in Tamil

Friendship Quotes in Tamil : Friendship is a bond that brings joy, support, and meaning to our lives. In Tamil culture, friendships are cherished deeply, often celebrated through poetry and thoughtful expressions.

This blog post, நட்பு கவிதை – Friendship Quotes Tamil, aims to share some heartfelt quotes that capture the essence of true companionship.

Tamil poetry has a unique ability to convey deep emotions through simple words, and these friendship quotes are no exception. Whether it’s about the strength of a bond, the beauty of shared memories, or the comfort of having a friend by your side, these quotes reflect the timeless value of friendship in our lives.

If you’re looking to express your feelings to a dear friend or simply appreciate the gift of friendship, these Tamil quotes will resonate with you. They remind us that true friendship is a rare and valuable treasure, one that should be cherished and nurtured every day.

Friendship Quotes in Tamil

Friendship Quotes in Tamil

நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு.. மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான் நட்பு.

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை.. புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை.

சொந்தம் என்பது பனித்துளி போல.. நொடி பொழுதில் மறைந்து விடும். ஆனால் நட்பு என்பது ஆகாயம் போல.. என்றுமே நிலைத்து இருக்கும்.

கர்ணனை போல் நண்பனை தேர்ந்தெடு.. நீ வீழ்கின்ற நிலை வந்த போதும் உனக்காக போராடுவான்.

Friendship Quotes in Tamil

ஆயிரம் காதலிக்கு சமம் உன்னை நேசிக்கும் ஒரு நண்பன்.. காதலை விட புனிதமானது தூய நட்புதான்.

தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்களும் தாய் தந்தை தான்.

நீ என்னிடம் பேசியதை விட எனக்காக பேசியதில் தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை.

நம்மள பத்தி தப்பான விஷயம் கேள்விபட்டா, ‘இவன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்’ னு டக்குனு சொல்ற மாதிரி ஒரு நட்பையாச்சும் சம்பாதிக்கணும்.

அவன் எனக்கு நல்ல நண்பன்” என்பதைவிட.. “அவனுக்கு நான் நல்ல நண்பன்” என்பது தான் நட்பின் சிறப்பு.

நட்பு.. ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு.. ஒரு தோழிக்கு விலை மதிக்கக் முடியாது பொக்கிஷம்.

Friendship Quotes in Tamil

இன்னொரு பிறவி பிறக்கப் போவதில்லை.. இன்னொரு நட்பு உன்னைப் போல கிடைக்கப் போவதில்லை.. அதனால் இப்பிறவியில் கிடைத்த உன்னை தவற விடப்போவதில்லை.

நட்பு என்பது பல இடங்களில் போகும் ரோஜா மலர்கள் அல்ல.. நம் இதயத்தில் பூக்கும் பாச மலர்கள்.

விரும்பிய ஒருவரை மட்டும் சொந்தமாக்கி கொள்வது காதல்..! விரும்பிய அனைவரையும் சொந்தமாக்கி கொள்வது நட்பு.

என்னை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத நீ, என்னோடு இருக்கையில்.. என் மனம் ஒருவித கர்வம் கொள்கிறது.

புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

Friendship Quotes Tamil

Friendship Quotes Tamil

எல்லோருக்கும் நண்பனாக இருப்பவன், யாருக்கும் நண்பன் இல்லை.

உள்ளங்களால் ஒன்றாகி உறவுகளில் கலந்திருக்கும் உடன் பிறவா நம் உறவுக்கு இன்றல்ல நாளையல்ல என்றென்றும் வாழ்வு உண்டு.

விரல் விட்டு எண்ண முடியாத நண்பர்கள் மத்தியில்.. என்றும் என் விரல் கோர்த்து நடக்கும் என் உயிர் நட்புக்கு என்றும் நான் அடிமை தான்.

இதயம் வலிக்கும் போது கண்கள் கலக்கினால் அது காதல். அதுவே கண்கள் கலங்கி இதயம் வலித்தால் அது நட்பு.

உதவியை செய்து விட்டுதான் பேச ஆரம்பிக்கிறது நட்பு.

Friendship Quotes Tamil

ஆயிரம் ரத்த சொந்தங்களை விட ஒரு உயிர் நண்பனின் சொந்தமே உயர்ந்தது.

சண்னடயிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின், நீ இழந்தது சிறந்த நண்பனை.

நல்ல நண்பனிடம் எவ்வளவு கோபமும் காட்டலாம்… ஆனால், ஒரு நிமிடம் கூட சந்தேகப்படக் கூடாது.

சிறகுகள் இல்லாத பறவையின் வாழ்க்கையும், நட்பு இல்லாத மனிதனின் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாத வாழ்க்கை.

சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் நட்பு.

Friendship Quotes Tamil

நண்பன் வெற்றி பெறும்போது ‘அவன் என் நண்பன்’ என பெருமை கொள்!!! தோல்வி அடையும் போது ‘நான் உன் நண்பன்’ என அவன் அருகில் நில்.

ஆயிரம் பேரை நண்பராக வைத்திருப்பது உனக்குப் பெருமையல்ல… ஆயிரம் பேர் எதிர்க்கும் போது உனக்காக அவர்களை எதிர்க்கக் கூடிய நண்பன் ஒருவனை வைத்திருப்பதே உனக்குப் பெருமையாகும்.

என் ஆயுள் முழுவதும் உன் நட்பு நீடிக்க வேண்டும்..! இல்லையெனில், உன் நட்பு உள்ளவரை என் ஆயுள் இருக்க வேண்டும்.

துன்பத்திலும் பழகுபர்கள்தான் உண்மையான நண்பர்கள்..! தேவைக்கு மட்டுமே பழகுபவர்கள் சுயநலவாதிகள்.

மனைவி – கடவுள் தந்த வரம்.. தாய் – கடவுளுக்கு நிகரான வரம்.. நண்பன் – கடவுளுக்கு கூட கிடைக்காத வரம்.

Tamil Friendship Quotes

Tamil Friendship Quotes

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்.. மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே நண்பனாக வேண்டும்.

உன் நண்பனிடம் பொய் சொல்லும் போது, அதை அவன் நம்பிவிடும் முட்டாள் என்று மட்டும் நினைக்காதே.. உன்னை காயப்படுத்த கூடாது என்பதற்காக தனது உணர்சிகளை மறைத்துக் கொள்கிறான்.

இனி பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு போய், அடுத்த அரைமணி நேரத்துல சகஜமா பேசுவதே நட்பு.

பூக்கள் என்றால் வாசம்…! காதல் என்றால் நேசம்…! அம்மா என்றால் பாசம்..! ஆனால்… நட்பு என்றால் சுவாசம்…

Tamil Friendship Quotes

உன் நண்பனை அளவோடு நேசி, ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்..! உன் எதிரியை அளவோடு வெறு, ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்.

உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்.. ஆனால் உன் நட்போடு வாழ பல ஜென்மம் வேண்டும்.

எதிரியைக் காட்டிலும் நண்பனிடம் கவனமாக இரு.. எதிரிக்கு உன் பலம்தான் தெரியும்.. உன் நண்பனுக்குதான் உன் பலவீனமும் தெரியும்.

நட்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க – அருகிளிருப்பவர்களுக்கு கொடுத்து விடுங்கள்.

நட்பு என்பது பெரிய விஷயம் அல்ல. அது கோடி கணக்கான சின்ன விஷயங்கள்.

Tamil Friendship Quotes

மலர்களின் எண்ணிக்கை கொண்டு தோட்டத்தின் அழகை அறியலாம்.. நட்பின் எண்ணிக்கை கொண்டு வாழ்கையின் அழகை அறியலாம்.

தினம் திட்டும் அப்பாவின் வார்த்தைகளைவிட திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது.

தூரத்துச் சொந்தம் போல தூரத்து நண்பனில்லை, ஏனெனில் நண்பான பின் யாரும் தூரமில்லை.

உள்ளங்கை பற்றி மெதுவாய் அழுத்தி, “ஒன்றுமில்லை.. எதுவும் நடக்காது.. நானிருக்கிறேன்” என்று சுவராய் நின்று காக்கும் நட்பு கிடைப்பது வாழிக்கையில் வரம்.

நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது. நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்.

நண்பனை நேசிப்பது போல் எதிரியையும் நேசிக்கப் பழகுங்கள்.. நண்பன் வெற்றிக்குத் துணை நிற்பான்.. எதிரி வெற்றிக்குக் காரணமாக இருப்பான்.

Tamil Quotes on Friendship

Tamil Quotes on Friendship

என் இதயதிற்கும் என் நண்பனுக்கும் ஒரு ஒட்ற்றுமை உண்டு. இருவரும் எனக்காக துடிப்பவர்களே.

நல்ல நண்பர்கள் உன்னை எந்த ஒரு முட்டாள் தனமான செயலையும் தனியாக செய்ய விடமாட்டார்கள்.

உனக்கும் எனக்கும் உள்ள நட்பு சூரியனுக்கும் சூரியகாந்தி பூவுக்கும் உள்ளது போல்.. நீ உதிக்காமல் நான் மலர மாட்டேன்.

நொடி கணக்கில் மௌனம்.. நிமிட கணக்கில் சிரிப்பு.. மணி கணக்கில் அரட்டை.. காலந்தோறும் சந்தோசம்.. இதெல்லாம் “நட்பில்” மட்டும் தான்.

பிரிந்து விட்டால் இறந்து விடுவேன்.. இது காதல்! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவேன்.. இது நட்பு.

Tamil Quotes on Friendship

உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும், உன் தோளின் மேல் நண்பன் கை இருந்தால்.

நல்ல இதயங்களை பார்ப்பது கடினம்..! நல்ல இதயத்துடன் பேசுவது அதிர்ஷ்டம்..! நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்.

உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்.. ஆனால் உன் நட்போடு வாழ பல ஜென்மம் வேண்டும்.

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை.. ஆனால் இறக்கும் போது, கண்டிப்பாக கொண்டு செல்வேன்.. உங்கள் நினைவுகளை.

காலம் நம்மை பிரித்தாலும்.. கடந்து தூரம் சென்றாலும் என்றும் இனிக்கும் நாம் துள்ளி திரிந்த நாட்கள்.

Tamil Quotes on Friendship

தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பதும், தடம் மாறும்போது தட்டிக்கேட்பதும் தான் உண்மையான நட்பு.

நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.. கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம்.

நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு.. உனது வாழ்க்கையையே மாற்றிவிடுவார்கள்.

முகத்தில் தெரியும் அழுகையும் சிரிப்பையும் காண்பது உறவு, அழுகைக்கும், சிரிப்பிற்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு.

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது “அன்பு”.. அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது “நட்பு”.

Tamil Proverbs Friendship

Tamil Proverbs Friendship

கடைசியில் நம் நினைவில் நிற்பது எதிரிகளின் வார்த்தைகள் அல்ல. நண்பனின் மௌனம் தான்.

எதிர் பார்க்கும் போது நல்ல நண்பர்கள் கிடைப்பதில்லை.. நல்ல நண்பர்கள் எதையும் எதிர்பார்பதில்லை.

நண்பனை ‘மச்சான்’ என்று அழைப்பது அவன் தங்கையை காதலியாக நினைப்பதால் அல்ல.. அவன் காதலியை தங்கையாக நினைப்பதால்தான்.

உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.. தவறுகள் செய்தால் தண்டித்து விடு.. ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே.

Tamil Proverbs Friendship

எனக்கு ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை. ஒரு சில உண்மையான நண்பர்கள் போதும்.

பிரிக்க முடியாத சொந்தம்.. மறக்க முடியாத பந்தம்.. தவிர்க்க முடியாத உயிர்.. எல்லாமே உன் நட்பு மட்டுமே.

ஒன்றாக படித்தபோது புழுதி பறக்கும் சாலைகளில் முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க சிரித்து மகிழ்ந்த காலம் எங்கே!!.. இப்பொழுது எ.சி அறையில் உட்கார்ந்து மெயில் அனுப்பி உறவாடும் நட்பு எங்கே?!.. மீண்டும் கிடைக்குமா அந்த பொற்காலம்.

நீ என் அருகில் இல்லாத போது என் கண்களை மூடிக்கொண்டு உன்னை நினைத்து புன்னகைத்து கொள்வேன்.. . இப்படிக்கு நட்பு!

Tamil Proverbs Friendship

சண்டை போட்டு நாலு நாள் பேசாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் எதுவும் நடக்காததுபோல் பேசும் நண்பன் இருக்கும் வரை வாழ்க்கை சொர்க்கம் தான்.

நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது… நண்பன் பிரிந்தால் வாழ்வில் இன்பம் தெரியாது.. நண்பனை மறக்காதே.

குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் காட்டி குடுக்க கூடாதாது.. அது தான் நட்பு.

நல்ல நண்பனைத் தேடுவதைவிட நீ நல்ல நண்பனாக இரு.. கட்டாயம் உன்னைத்தேடி நல்ல நட்பு அமையும்.

நட்பு கவிதை

நட்பு கவிதை

Friendship Quotes Tamil, Tamil Friendship Quotes, Tamil Quotes on Friendship , Tamil Proverbs Friendship, நட்பு கவிதை, Natpu Thirukkural.

நட்பு என்பது கண்களையும் கை விரல்களையும் போன்றது.. கை விரலில் காயம் பட்டால், கண்கள் அழுகிறது.. கண்கள் அழுதால் கை விரல்கள் துடைக்கின்றது.

ஒரு நல்ல நட்பு கரும்பை போன்றது.. நாம் அதை அடித்தாலும், ஒடித்தாலும், கடித்தாலும், பிழிந்தாலும் நமக்கு இனிப்பை மட்டுமே தரும்.

காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை.. காரணம் சொல்லு பிரிந்து போக இது காதலும் இல்லை.. உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு.

நட்பு கவிதை
Friendship Captions in Tamil

விட்டு பிடிப்பது நட்பல்ல.. விட்டு கொடுப்பது நட்பு..! விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல.. கடைசி வரை விட்டு விலகாமல் இருப்பதுதான் உண்மையான நட்பு.

பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை.

நான் உன் உயிர் தோழனாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக இருப்பேன்.

நட்பு கவிதை
Friendship Status in Tamil

நண்பன் என்பவன் யார்? எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்கு முடிகிறதோ அவனே நண்பன்.

எல்லா பசங்களும் நாசமா போறதுக்கு காரணம் நண்பன் சொன்ன அந்த ஒரு வரி.. “மச்சான் அவ உன்னதாண்ட பாக்குற.

நானும் என் உயிர் நண்பனும் பேச பாஷை தேவையில்லை. முக பாவங்கள் போதும்.

நட்பை விலைக்கு வாங்க முடியாது.. தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது.

நட்பு கவிதை
Friendship Captions in Tamil

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் நிறம் மாறாது. அதுபோல் நீ அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் என்றுமே என் நட்பு மாறாது.

என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்.. நான் உன்னை தடுக்கமாட்டேன்.. ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார்.. அங்கே உனக்காக நான் இருப்பேன்.. அப்போதும் நல்ல நண்பனாய்.

நண்பன் எதிரியானால் நிம்மதி இருக்காது.. எதிரி நண்பனானால் நம்பிக்கை இருக்காது.

Natpu Thirukkural

Natpu Thirukkural

Friendship Quotes Tamil, Tamil Friendship Quotes, Tamil Quotes on Friendship , Tamil Proverbs Friendship, நட்பு கவிதை, Natpu Thirukkural.

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் காதலை நேசி.. ஆனால் சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் நட்பை நேசி.

நான் ஒரு கண்ணாடி.. என்னை பார்த்து நீ சிரித்தால், நானும் சிரிப்பேன்.. நீ அழுதால், நானும் அழுவேன்.. ஆனால் நீ அடித்தால், நான் அடிக்க மாட்டேன்.. உடைந்து போவேன்.. அது தான் உண்மையான நட்பு.

நன்றாக பழகும் அனைவரும் நண்பர்கள் இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும் சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்.

Natpu Thirukkural
Friendship Status in Tamil

ஒவ்வொரு மனிதனுக்கும் “கடவுள்” துணை இருக்கிறார்! “நட்பு” என்னும் பெயரில்.

பிறப்பால் மனிதனாக பிறந்தாலும் உருவத்தில் எருமை போல் இருக்கும் என் அருமை(எருமை) தோழனே, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

காதல் என்பது கடவுள் போல.. யாரும் பார்த்தது இல்லை..! நட்பு என்பது தாயின் கருவறை போல.. பார்க்காதவர்கள் எவரும் இல்லை.

Natpu Thirukkural
Friendship Captions in Tamil

காதல் வந்தால் சொல்லி அனுப்பு, உயிரோடிருந்தால் வருகிறேன் – இது காதல்.. சரக்கு இருந்தால் சொல்லி அனுப்பு சயிட் டிஷ்ஷோடு வருகிறேன் – இது நட்பு.

கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போதும், அவர்கள் சிறந்த தம்பதியாகிரார்கள்.

உலகமே உன்னை எதிர்த்தாலும் உன்னோடு நிற்பவன் தான் உண்மையான நண்பன்.

Natpu Thirukkural
Friendship Status in Tamil

கண்ணீர் வராமல் காக்கும் இமைகள் தான் உறவுகள் என்றால், அந்த இமைகளையும் கடந்து வரும் கண்ணீரை துடைக்கும் கரங்கள் தான் நட்பு.

நட்பு என்பது ஒரு கைக்குழந்தை போல்.. யார் அன்போடு நடந்து கொண்டாலும் அவர்களோடு வந்து விடும்.

எங்கே பிறந்தாலும், எப்படியோ இருந்தாலும், உணர்வை உணர்வுக்கு ஒன்று சேர தருவது தான் உயிர் நட்பு.

As we come to the end of our collection of friendship quotes in Tamil, it’s clear that the bond of friendship is one of life’s greatest blessings.

These quotes beautifully capture the emotions, trust, and unwavering support that make friendships so special. They remind us to appreciate the friends who stand by us through thick and thin.

Friendship is not just about being there in good times, but about offering a shoulder in tough moments, sharing laughter, and building a lifetime of memories. These quotes serve as a gentle reminder of how vital it is to nurture and value our friendships every day.

We hope these Tamil friendship quotes have inspired you to express your love and gratitude for your friends. After all, true friendship is a rare gift—one that grows stronger with every moment of care and understanding.

Tags: Friendship Quotes Tamil, Tamil Friendship Quotes, Tamil Quotes on Friendship , Tamil Proverbs Friendship, நட்பு கவிதை, Natpu Thirukkural.