Motivational Quotes in Tamil

Tamil Motivational Quotes : இன்றைய நம்பிக்கையும் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் மோட்டிவேஷனல் மேற்கோள்கள் உங்கள் வாழ்க்கையை ஊக்கமூட்ட உதவும்.

Motivational Quotes in Tamil

விழுதல் என்பது வேதனை.. விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை.

பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ.. ஒரு பருக்கை சோற்றைக் கூட தராது.. உழைச்சா தான் சோறு.

இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லாதபொழுது உன் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்.

குழந்தைகள் நடைபழகும் வரை கைகொடுங்கள்.. நடக்கத்தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்.

நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் விடை, நாம் காணும் கனவுகளில் தான் உள்ளது.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

நீ வலிமையாக இருக்கவேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்.

உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே.. உனக்கு துணையாக நான் இருக்கிறேன்.. தைரியமாக போராடு.. – இப்படிக்கு தன்னம்பிக்கை.

இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் போதுதான் துணிச்சல் அதிகமாகிறது.

வெட்டப் பட்ட மரக்கிளையிலும் உயிருண்டு, அதை நட்டுப்பார்.. நம்பிக்கை எழுந்து வரும்.

நீ நீயாகவே இரு!! உலகம் தன்னை மாற்றி கொள்ளும்.

கடந்து செல்.. நடந்து முடிந்தது ஒரு சின்ன அத்தியாயம் தான்.. வெறும் பக்கத்தை மட்டும் திருப்பு.. புத்தகத்தை மூடாதே.

ஒரு நாள் நீ வாழ்ந்த வாழ்க்கை உன் கண் முன் தெரியும்.. அதை ரசிக்கும் படியாக வைத்து கொள்.

வெற்றியை தேடி நீ சொல்லாதே.. உன் மீது முழு நம்பிக்கை வை.. வெற்றி உன்னை தேடி வரும்.

உன் சிறகுகளை நீ விரிக்கும் வரை நீ எட்டக் கூடிய உயரத்தை உன்னால் உணர முடியாது.

வாழ்க்கை ஒரு போராட்டம்.. இதில் தோல்வி கூட வெற்றிக்குச் சமமே.. தோற்க மாட்டேன் என்று வியர்வை சிந்தினால்.

வெற்றி என்பது நூறு முறை விழுந்து, நூறு முறை எழுவது.

வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது.. நீங்கள் அனுமதித்தால் தவிர.

உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

எனது வெற்றி உடனடியானது அல்ல, ஆனால் நிச்சயமானது.

நீ அடுத்தவருக்காக விளக்கை ஏற்றும்பொழுது, உன்னுடைய பாதையும் வெளிச்சமாகிறது.

விதைத்துக் கொண்டே இரு.. முளைத்தால் மரம்.. இல்லையேல் உரம்.

முயற்சி செய்ய தயங்காதே.. முயலும் போது உன்னை முட்களும் முத்தமிடும்.

அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது… அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை.

வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது.. அதைவிட வலிமையானது நீ உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.

வாய்ப்புகள் விலகும் போது அதை எண்ணி கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்.. மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்.

கனவு பெரியாதாக இருக்கும் போது உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்.

நம்பிக்கையை விட தைரியமான ஒன்று வேறு ஏதும் இல்லை.

முடியாது என்று நீங்கள் சொல்வது, யாரோ ஒருவர் எங்கேயோ செய்துக் கொண்டிருக்கிறார்.

மனதை மகிழ்ச்சிக்குப் பழக்குங்கள்.. எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என்று முடிவு கட்டினால் சாகும்வரை யாரும் சிரிக்கவே முடியாது.

இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல.. நீ செய்வதை விரும்புவதில்தான்.

இது வலிகளால் உரம் போட்ட இதயம்.. சிறி சிறு துன்பங்களால் துவண்டு விடாது.. முட்கள் உள்ள வேலி தான் உறுதியானது.

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது.

நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு “நதி” போல… ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கு “கடலாக”.

உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே.. நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு.

நீ நினைத்தால் விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு.

வாழ்வில் சிலநேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்.. அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள்.. மனம் தளராதீர்கள்.. அவைதான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்.

முயலும் வெல்லும், அமையும் வெல்லும்.. ஆனால் முயலாமை என்றும் வெல்லாது.

சாத்தியம் என்கிற வார்த்தைதான் அசாத்தியம் என்பதன் அஸ்திவாரம்.

மனது சந்தோஷமா இருக்கும்போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை.. எப்பவுமே சந்தோஷமா இருங்க.. எதிர்காலத்தை எதிர்கொள்ள கஷ்டம் இருக்காது.

தோல்வி அடைந்தால், மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர, இலக்குகளை அல்ல.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது.

மாற்றங்களை எற்றுக்கொல்பவரின் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் உண்டு

ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.. நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.

எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது.

என்னை யாருக்கும் பிடிக்கவில்லை” என்று கவலைபடுவதற்கு நீ சந்தையில் நிற்கும் பொம்மையல்ல.. நீ என்பது நீயே.. உன்னை உனக்கு பிடித்தால் போதும்.

முந்திக்கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும் ! காத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும் ! சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை.

நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்.

இது வரை கிடைத்திடாத ஒரு பொருள் உனக்கு வேண்டுமென்றால், இது வரை முயற்சிக்காத செயலை நீ செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது.. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது.. மற்றொன்று ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.. அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களும் தான்.

உன்னைவிட்டு விலகி செல்பவற்றை சந்தோசமாக வழியனுப்பி வை.. வாழ்க்கை, அதைவிட ஒரு சிறந்த பரிசை, தயாராக வைத்திருக்கிறது என்று அர்த்தம்.

நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை.. எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் குறி வையுங்கள்.

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்.

தன்னம்பிக்கை – நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை.. மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை.. தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.. அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.. அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே.

ஒரு நொடி துணிந்தால் நாம் இறந்துவிடலாம்.. ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெய்த்து விடலாம்.

வெற்றியாளர்கள் அசாதாரண விஷயங்களை செய்பர்கள் அல்ல.. சாதாரண விஷயங்களை கூட அசாதாரணமாக செய்பவர்கள்

நீ யாரா இருந்தாலும் பரவாயில்லை.. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.. நீ உறுதியாய் இருந்தால்.

என்ன வாழ்க்கைடா இது’ என்று நினைப்பதை விட, ‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’.. என்று எண்ணி வாழுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

மோட்டிவேஷனல் மேற்கோள்கள்

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்.

பல தோல்விகளை சந்தித்தேன்.. வெற்றி கிடைத்த போது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்துக் கொண்டேன்.

அழகாக இல்லை என்று வருத்தப்படாதே.. உன் தகுதி உயரும்போது நீ அழகாய் தெரிவாய்.

முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள்.. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.

போராடி தோற்றுப்பார் !! உன்னை ஜெய்த்தவனும் உன்னை மறக்கமாட்டான்.

நீங்கள் எதையாவது மாற்ற விரும்பினால், முதலில் அந்த என்னத்தை மாற்றுங்கள்.. நீ மாறாமல் எதுவும் மாறாது.

வெற்றி என்பது பெற்று கொள்வது.. தோல்வி என்பது கற்று கொள்வது.. முதலில் கற்று கொள்வோம், பிறகு பெற்று கொள்வோம்.

நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.. தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்.. பின் தயங்காதீர்கள்.

மற்றவர்கள் உன்னை கீழே வீழ்த்த முயன்றால், நீ அவர்களுக்கு மேலே இருக்கிறாய் என்று அர்த்தம்.

உன் கதையை நீ எழுதும்போது, பேனாவை யார் கைக்கும் கொடுத்து விடாதே.

எண்ணங்களில் கவனம் வையுங்கள், அவை சொற்களாகின்றன.. சொற்களில் கவனம் வையுங்கள், அவை செயல்களாக மலர்கின்றன.. செயல்களில் கவனம் வையுங்கள், அவை பழக்கங்கலாகப் படிகின்றன.. பழக்கங்களில் கவனம் வையுங்கள், அவை உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

தோல்வி என்பது வீழ்வது அல்ல. மீண்டும் எழாமல் இருப்பது.

எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.. யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்.

வெற்றி பெற ஒரு சிறந்த வழி – வாழ்க்கைல ஒரு ஐடியா எடுத்துக்கோங்க.. அந்த ஐடியாவையே வாழ்க்கையாக்கிருங்க.

யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையை இரு.. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு.. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

லட்சியம் இல்லாத வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் போன்றது.

பிரச்சனைகள் என்பவை சிறு கற்கள் போன்றவை.. கண்ணின் அருகில் வைத்தால், நம்முடைய பார்வையை மறைத்து விடும்.

ஒரு மடங்கு திறமை, இரு மடங்கு தேடல், மூன்று மடங்கு பொறுமை என்ற விகிதத்தில் உன்னை நீ தயார் படுத்தினால் மட்டுமே உன் லட்சியம் இலக்கை அடைய முடியும்

தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

எட்டி பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை.. அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை.

உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசணும்.. உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசணும்.. அதுவே வெற்றியாளர்களின் சிறப்பு.

வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி சிரித்து மகிழ வைக்கும்.. தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.

நீ ஏழையாக பிறப்பது உன் தவறில்லை. நீ ஏழையாக சாவது தான் உன் தவறு.

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது – கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம். அது போல் வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது – நீங்கள் அனுமதித்தால் தவிர.

இதயத்தில் எத்தனை வலிகளும் கவலைகளும் இருந்தாலும், இனிமையாக சந்தோஷமாக பிறரிடம் பேசினால் உலகமே உங்களிடம் பேச ஆசையும் ஆவலும் கொள்ளும்.

சென்றுக் கொண்டிருப்பவன் காலத்தை வென்றுக் கொண்டிருக்கிறான்.. நின்றுக் கொண்டிருப்பவன் காலத்தை தின்றுக் கொண்டிருக்கிறான்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

வலியோடு போராடினால் தான், ஒரு பெண் தாயாக முடியும்.. இருளோடு போராடினால் தான், புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும்.. மண்ணோடு போராடினால் தான், விதை மரமாக முடியும்.. வாழ்க்கையோடு போராடினால் தான், நீ வரலாறு படைக்க முடியும்.

அன்பு இதயத்தில் இருக்கட்டும், அறிவு செயலில் இருக்கட்டும், ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும், நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்.

வாழ்க்கையில் கஷ்டம் வருவது உன்னை அழிப்பதற்கு அல்ல.. உன்னில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு.

வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும், நம்மை ஒரு படி மேலே எற்றிவிடவே வருகின்றன.

தவறாக வேடுமானால் சிந்தியுங்கள். ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்.

இனிப்பும் கசப்பும் மகிழ்வும் உனக்குள்ளே தான் இருக்கிறது.. உனக்கு இன்பம் தர உன்னைத் தவிர யாராலும் முடியாது.

பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து, பூமி முத்தமிட்டு சொன்னது.. “நீ ஒன்பது முறை எழுந்தவன்..!!” என்று.

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை.

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

பெரிதாக யோசி. சிறிதாக தொடங்கு. ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது.

வலியோடு நடத்தப்படுகிற போராட்டத்தால் மட்டுமே, வெற்றிகளை கூட விசித்திரமாய் கொடுக்க முடியும்.

வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றித்தான் ஆகவேண்டும்.

உயர்வோ தாழ்வோ, விடியும் வரை போராடு.. விடியாது போனால், சாகும் வரை போராடு.

கசப்பிலும் சுவையுண்டு.. இனிப்பிலும் நஞ்சு உண்டு.. மகிழ்ச்சியும் துக்கமும் வெறும் மனதளவு.. மயங்காமல் வீரநடை போடு.

கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது.. சிரிப்பவன் கிட்ட கஷ்டம் இருக்காது.. ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.

கீழே விழுந்து தூக்கி விட ஆள் இல்லாமல் அழுது கொண்டே எழுந்தவனா நீ?.. அடுத்த முறை விழுந்தால் யாரையும் நம்பாமல் நீயே எழுந்துக் கொள்வாய்.

தோல்விக்கு இதயத்தில் இடம் கொடுக்காதே..!! வெற்றிக்கு தலையில் இடம் கொடுக்காதே.

தடைகளை தட்டிக்கழிப்பதை விட, தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்.

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பிக்கின்றன.

கவலைகள் ஒருபோதும் வெற்றிகளை தருவதில்லை.. முயற்சிகளே.

எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.. எந்த மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நன்றாகவே இருப்பான்.. இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நினைத்து வியர்வை சிந்துங்கள்.. எளிதில் சாதித்து விடுவீர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

விழிப்பதற்கே உறக்கம்.. வெல்வதற்கே தோல்வி.. எழுவதற்கே வீழ்ச்சி.. இனிய காலை வணக்கம்.

வெள்ளம் பாய்ந்து வரும் பொழுது நாம் நிமிர்ந்து நின்று எதிர்ப்பது விவேகமல்ல.. வளைந்து கொடுத்தோம் என்றால் மிதந்து செல்லலாம்.

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீயாக இருக்கட்டும்.

இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ் மனது தான்.. அது என்ன நினைக்கிறதோ, அதை நோக்கியே உன் வாழ்க்கை பயணம் அமைகிறது.

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்.. எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்.

உன் கனவுகளை பின் தொடராதே.. துரத்திச் செல்.

உன் கவவுகளை கலைப்பது தோல்வி அல்ல – சந்தேகம்.

உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டுமென்றால் உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்.

என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்.. காரணம், நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல.. 1000 தோல்விகளை பார்த்தவன்.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

வாய்ப்புகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது. நாம் இழந்ததையும் சேர்த்து.

நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.

வாழ்க்கையில் நீ தவறே செய்ததில்லை என்றால், நீ செல்லும் வழி தவறானதாகும்.

ஒரு மனிதனுக்கு வெற்றியை கற்றுத் தரும் குரு யார் தெரியுமா? பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மனைவி, ஆசிரியர்.. இவர்கள் யாரும் இல்லை.. தோல்வி தான்.

மனம் நினைத்தால் மலையைக்கூட புரட்டலாம். நினைக்காவிட்டால், புத்தகத்தைக் கூட புரட்ட முடியாது.

சுமக்கும் வரைதான் பாரம், சுமந்து விடுங்கள்.. கடக்கும் வரைதான் தூரம், கடந்து விடுங்கள்.

உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.. மற்றவருக்கு நீ கெட்டவனாய் இருந்தால் அது உன் குற்றம் இல்லை.. கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே!! அது பார்க்கபடுபவன் பிழையல்ல.. பார்ப்பவன் பிழை.

விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது.

ஒவ்வொரு நாளும் உனக்கு இரண்டாவது வாய்ப்பு தான்.

வெற்றி வந்தால் பணிவு அவசியம்.. தோல்வி வந்தால் பொறுமை அவசியம்.. எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்.. எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.. அது உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

இந்த மோட்டிவேஷனல் மேற்கோள்கள் உங்களுக்கு சிரமங்களை தாண்டி முன்னேற உதவியிருக்கின்றன என நம்புகிறோம். உங்கள் விருப்பமான மேற்கோள்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்!